'அந்தாதூன்' Vs 'தும்பாட்': தலைசிறந்த திரைப்படம் எது? - ட்விட்டரில் ரசிகர்கள் கருத்து

By ஏஎன்ஐ

இந்தியாவின் தலைசிறந்த திரைப்படம் எது என்று ட்விட்டரில் பல ரசிகர்கள் பங்கேற்ற உரையாடலில் 'அந்தாதூன்' மற்றும் 'தும்பாட்' ஆகிய திரைப்படங்களுக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது.

செவ்வாய்க்கிழமை அன்று இந்தப் படங்களின் பெயர்கள் ட்விட்டர் இந்தியாவில் அதிகமாக ட்ரெண்ட் ஆகின. கடந்த மூன்று நான்கு வருடங்களில் தாங்கள் பார்த்த தலைசிறந்த திரைப்படம் இவை என்று பலர் இந்த இரண்டு படங்களையும் பட்டியலிட்டுள்ளனர்.

இப்படி ஒரு உரையாடல் துவங்கக் காரணம், மனீஷ் முந்த்ரா என்ற தயாரிப்பாளர். இவர் 'மஸான்', 'நியூட்டன்' உள்ளிட்ட படங்களை தயாரித்தவர். "உங்களை பிரமிக்க வைத்த, வாயடைக்க வைத்த ஒரு இந்தி திரைப்படத்தைச் சொல்லுங்கள். கடந்த மூன்று நான்கு வருடங்களில் வெளிவந்த திரைப்படங்களில் மாஸ்டர்பீஸ் என்று எதை அழைக்கலாம்" என்று மனீஷ் ட்வீட் செய்திருந்தார். மேலும் இந்தி சினிமாக்களின் தரம் குறைந்துள்ளது என்பதை தவறென்று தனக்கு தானே நிரூபித்துக்கொள்ளவே இப்படிக் கேட்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து பல்வேறு பயனர்கள் தங்கள் விருப்பப் படங்களைப் பட்டியலிட ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் இது ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வந்த 'அந்தாதூன்' மற்றும் ரஹி அனில் பார்வே - ஆனந்த் காந்தி இயக்கத்தில் வெளிவந்த 'தும்பாட்' ஆகிய இரண்டு படங்களுக்கும் இடையேயான போட்டியாக வந்து நின்றது.

'தும்பாடுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை' என்று அதன் ஒளிப்பதிவு, பின்னணி இசையைப் புகழ்ந்து ஒரு பக்கம் பதிவுகள் வந்தன. 'அந்தாதுனுக்குக் கிடைத்த பாராட்டுக்கு அது தகுதியான படம் இல்லை என்று சொல்பவர்கள் திரைப்படங்கள் பற்றிய அறிவு இல்லாதவர்கள்' என்று இதைப் புகழ்ந்து இன்னொரு பக்கம் வந்தன.

இரண்டு படங்களுக்குமான ஆதரவு - எதிர்ப்பு ட்வீட்கள் சரி விகிதத்தில் வர ஆரம்பித்தன. சிலர், இரண்டு படங்களுமே ஆஸ்கருக்குத் தகுதியானவை என்று பொதுவாகப் பேசி வந்தனர். 'பிங்க்', 'ஆர்டிகள் 375', 'ஆர்டிகள் 15', 'பத்லா' ஆகிய படங்களும் பலரது பட்டியலில் இடம் பிடித்திருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE