காலையில் மனம் நொந்தேன்; மாலையில் ஹவுஸ்ஃபுல்: செல்வராகவனின் 'துள்ளுவதோ இளமை' நினைவுகள்

By செய்திப்பிரிவு

'துள்ளுவதோ இளமை' படம் வெளியான அன்று நடந்த அனுபவத்தை இயக்குநர் செல்வராகவன் பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.

2002-ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், ஷெரின், அபினய், ரமேஷ், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'துள்ளுவதோ இளமை'. யுவன் இசையமைப்பில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தை கஸ்தூரி ராஜா இயக்கியதாகவே படத்தில் குறிப்பிட்டு இருந்தார்கள். படத்தின் வெற்றிக்குப் பிறகு செல்வராகவன் அளித்த பேட்டியில், தான் இயக்கியதாகவும் விநியோகஸ்தர்களிடம் படத்தை விற்பதற்காகவே அப்பாவின் பெயரைக் குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார். 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலமாகத்தான் தனுஷ் - செல்வராகவன் இருவருமே தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்கள்.

'துள்ளுவதோ இளமை' வெளியான நாளன்று என்ன நடந்தது என்பதை இயக்குநர் செல்வராகவன் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

" 'துள்ளுவதோ இளமை' வெளியான அன்று முதல் காட்சி தியேட்டருக்குப் போனேன். அப்போது இந்தப் படம் அடுத்த வாரம் டிவியில் வரும் பார்த்துக் கொள்வோம் என்று ஒருவர் சொன்னதைக் கேட்டு மனம் நொந்துவிட்டது. அப்படியே வீட்டுக்கு வந்து தூங்கிவிட்டேன்.

மாலையில் உதவி இயக்குநர் போன் செய்து சார் உங்கள் படம் ஹவுஸ்ஃபுல் சார் என்றார். வேறு ஏதாவது படமாக இருக்கப் போகிறது என்று சொன்னேன். நீங்கள் வாருங்கள் என்றார். அப்போது தியேட்டருக்குப் போனேன். டிக்கெட் வாங்க பெரிய க்யூ இருந்தது. அந்தப் படம் தயாராகி ஒன்றரை ஆண்டுகள் வரை லேப்பிலேயே இருந்தது. பெரிய பண நெருக்கடிக்கு இடையேதான் அந்தப் படம் வெளியானது".

இவ்வாறு இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

சினிமா

34 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

மேலும்