'மூக்குத்தி அம்மன்' படத்தில் அம்மன் பாடலொன்றைப் பாடியுள்ளார் எல்.ஆர்.ஈஸ்வரி.
'எல்.கே.ஜி' படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி நடித்து, இயக்கியுள்ள படம் 'மூக்குத்தி அம்மன்'. இந்தப் படத்தை அவருடன் என்.ஜே.சரவணனும் இணைந்து இயக்கியுள்ளார். இதில் நயன்தாரா, மெளலி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அனைத்துமே முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கரோனா அச்சுறுத்தல் முடிந்து திரையரங்குகள் திறந்தவுடன், 'மூக்குத்தி அம்மன்' படம் வெளியாகும் என இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் பிரபல பின்னணிப் பாடகியான எல்.ஆர்.ஈஸ்வரி பாடலொன்றைப் பாடியுள்ளார். நீண்ட காலமாக திரையுலகிலிருந்து விலகியே இருந்தார் எல்.ஆர்.ஈஸ்வரி.
இப்போதும் பல்வேறு அம்மன் கோயில் திருவிழாக்களில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல்கள் தான் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. 'மூக்குத்தி அம்மன்' படத்துக்காக 'மூக்குத்தி அம்மனுக்கு பொங்கல் வைப்போம்...' என்ற பாடலை பாடியிருக்கிறார் எல்.ஆர்.ஈஸ்வரி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'எல்.கே.ஜி' படத்தில் ஒரு பாடலைப் பாடியிருந்தார். இப்போது மீண்டும் ஆர்.ஜே.பாலாஜி படத்திலேயே அம்மன் பாடலையும் எல்.ஆர்.ஈஸ்வரி பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
» ஒரு முதிர்ச்சியான காதல் கதை - தனது புதிய தொடர் குறித்து ஏக்தா கபூர் பெருமிதம்
» ஜேம்ஸ் பாண்டுக்கு மகளா? - இணையத்தில் கசிந்த ‘நோ டைம் டு டை’ கதை
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago