கிரேஸி மோகனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்: ஜூன் 10-ம் தேதி நேரலையில் நடைபெறுகிறது

By செய்திப்பிரிவு

தமிழ்த் திரையுலகம் மற்றும் நாடக மேடை என இரண்டிலும் கால் நூற்றாண்டுக்கு மேலாக நகைச்சுவையைத் தந்த எழுத்தாளர், நடிகர் கிரேஸி மோகன் கடந்த ஆண்டு ஜூன் 10-ம் தேதி காலமானார்.

தற்போதைய கரோனா ஊரடங்கு சூழலில், டோக்கியோ தமிழ்ச் சங்கம், கிரேஸி கிரியேஷனுடன் இணைந்து, கிரேஸி மோகனுக்கான நேரலை, சிறப்பு நினைவேந்தல் நிகழ்வை ஜூன் 10-ம் தேதி கமல்ஹாசன் முன்னிலையில் வழங்கவிருக்கிறது.

25 அமைப்புகள் இணைந்து...

கிரேஸியின் ஓராண்டு நினைவுநாளை சிறப்பிக்க உலகெங்கிலும் உள்ள 25-க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் இணைந்திருக்கின்றன. இதில், ‘இந்து தமிழ்’ நாளிதழும் கரம் கோர்க்கிறது.

மேலும், பல்வேறு சமூக வலைதளங்களில் நேரலையில் ஒளிபரப்பப்படும் இந்நிகழ்வில், திரைக் கலைஞர்கள் நாசர், பிரபு, குஷ்பு, கே.எஸ்.ரவிகுமார், சந்தானபாரதி, முனைவர் கு.ஞானசம்பந்தன் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.

இந்த நினைவேந்தல் நிகழ்வுஅரங்கேற கிரேஸி கிரியேஷனின் மாது பாலாஜி , அதன் அங்கத்தினர், நடிகர் நாசர், டோக்கியோ தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ஜி.ஹரிநாராயணன் மற்றும் அங்கத்தினர் உறுதுணையாக உள்ளனர்.

நினைவுப் பாடல் வெளியீடு

ஜூன் 10-ம் தேதி நடைபெறும் இந்நேரலை நிகழ்வில், துபாய் பொன்மாலைப் பொழுது நண்பர்கள் குழுமத்தின் படைப்பாக்கத்தில், டோக்கியோ தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் ‘கிரேஸி மோகன் – சிறப்பு நினைவுப் பாடல்” ஒன்றை கிரேஸி மோக னின் நீண்டகால நண்பரான கமல்ஹாசன் வெளியிடுகிறார். டோக்கியோ தமிழ்ச் சங்கம், கிரேஸி கிரியேஷனுடன் இணைந்து நடத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சி, கமல் முன்னிலையில் நேரலையில் நடைபெற உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE