'பிரண்ட்ஷிப்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

ஹர்பஜன் சிங் நாயகனாக நடித்து வரும் 'பிரண்ட்ஷிப்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஹர்பஜன் சிங், தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகிறார். 'பிரண்ட்ஷிப்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அர்ஜுன், லாஸ்லியா, சதீஷ் உள்ளிட்ட பலர் ஹர்பஜன் சிங் உடன் இணைந்து நடித்து வருகிறார்கள்.

இந்தப் படத்தை ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர். இந்தக் கூட்டணி இதற்கு முன்பாக 'அக்னிதேவி' எனும் படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன. இதனால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

தான் நாயகனாக நடித்துள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் தளத்தில் ஹர்பஜன் சிங் பகிர்ந்து கூறியிருப்பதாவது:

"இடியும் மின்னலும் ஆர்ப்பரிக்க இதோ சூப்பர் ஸ்டார், தல, தளபதி, உலகநாயகன் கோட்டையில் நம்ம 'பிரண்ட்ஷிப்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்".

இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

38 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்