தென்னிந்திய திரையுலகமே சிறப்பு; பாலிவுட் அல்ல: பாயல் கோஷ்

தென்னிந்திய திரையுலகமே சிறப்பானது என்று பாலிவுட் அல்ல எனவும் நடிகை பாயல் கோஷ் தெரிவித்துள்ளார்.

2009-ம் ஆண்டு 'பிரயாணம்' என்ற படத்தின் மூலம் தெலுங்கில் நாயகியாக அறிமுகமானவர் பாயல் கோஷ். அதனைத் தொடர்ந்து தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் 'தேரோடும் வீதியிலே' படத்திலும் பாயல் கோஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதனிடையே, தென்னிந்திய திரையுலகினரின் பெண்களை பலர் தவறாக பேசுவதை கண்டித்துள்ளார் பாயல் கோஷ். இது தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் அவர் கூறியிருப்பதாவது:

"தென்னிந்திய திரை துறையை பற்றி சில பெண்கள் தவறாக பேசுவதை பார்க்கிறேன். நான் பரிதாபப்படுகிறேன். பாலிவுட்டை விட தென்னிந்திய சினிமா சிறந்தது. தென்னிந்திய நடிகர்கள், இயக்குனர்கள் எல்லாம் அற்புதமானவர்கள், அதன் ரசிகர்களும் அப்படியே. தென்னிந்திய சினிமாவால் பாலிவுட்டுடன் போட்டி போட முடியும், தென்னிந்திய சினிமா மிகப்பெரியது. தென்னிந்திய படங்களை ரீமேக் செய்வதற்காக பாலிவுட் காத்திருக்கிறது”

இவ்வாறு பாயல் கோஷ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE