திரைப்படங்களின் தயாரிப்பு செலவு 50 சதவீதம் குறைப்பு - கேரள தயாரிப்பாளர் சங்கம் முடிவு

கரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. திரையரங்குகள் மூடப்பட்டு, பட வெளியீடுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் திரைப்பட தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். பணிகள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் படங்கள் எப்போதும் திரைக்கு வரும் என்று சொல்லமுடியாத சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் இனி வரும் படங்களில் தயாரிப்பு செலவை பாதியாக குறைக்க மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து கேரளா திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ரெஞ்சித் கூறியுள்ளதாவது:

கேரளா திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விரைவில் அம்மா, ஃபெஃப்கா உள்ளிட்ட மற்ற சங்கங்களுக்கு தெரியப்படுத்துவோம். மலையாள திரைத்துறை மேற்கொண்டு செயல்பட வேண்டுமென்றால் இதைத் தவிர வேறு வழியில்லை.

கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானதில் வெறும் ஆறு படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியுள்ளன. தற்போதைய சூழலில் சில நாட்களுக்கு எல்லா விஷயங்களும் நடக்கும் என்று சொல்லமுடியாது. எனவே தயாரிப்புச் செலவு குறைக்கப்பட வேண்டும். ஒரு படத்தை தயாரிக்கவேண்டுமெனில் 50 சதவீத தயாரிப்பாளர்கள் இந்தியாவுக்கு வெளியில் இருப்பவர்களாக இருக்கிறார்கள். எனவே இக்கட்டான சூழலில் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE