'கொஞ்சம் கரோனா நிறைய காதல்' குறும்படத்தைப் பார்த்துவிட்டு, சாந்தனுவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் விஜய்.
தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தலால் 5-வது கட்டமாக ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் திரையுலகில் இறுதிக்கட்டப் பணிகள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்பு இரண்டுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் சின்னத்திரை படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை.
இந்த கரோனா ஊரடங்கில் வீட்டிலிருந்தவாறு 'கொஞ்சம் கரோனா நிறைய காதல்' என்ற குறும்படத்தை எழுதி, இயக்கி வெளியிட்டார் சாந்தனு. இதில் அவரும், அவரது மனைவி கீர்த்தியும் நடித்துள்ளனர். முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்டுள்ள இந்தக் குறும்படத்துக்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர். இந்தக் குறும்பட வெளியீட்டுக்கு முன்பாக இதன் டீஸரும் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
விஜய்க்கு மிகவும் நெருக்கமானவரான சாந்தனுவிடம், 'கொஞ்சம் கரோனா நிறைய காதல்' குறும்படத்தை விஜய் பார்த்துவிட்டாரா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியிருப்பதாவது:
» போலியான நடிகர்கள் தேர்வு விளம்பரம்: இயக்குநர் கார்த்திக் நரேன் காட்டம்
» வடிவேலு என்னை மன்னிச்சுடு: புகார் தொடர்பாக மனோபாலா விளக்கம்
"முதலில் டீஸரை அனுப்பினேன். "அட்ரா... அட்ரா... அட்ரா... factu factu factu" என்று ரிப்ளை பண்ணியிருந்தார். டீஸரில் உள்ள எமோசன் அவருக்கு பிடித்து, ரொம்ப ஜாலியாக ரிப்ளை செய்தது எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. படமாகப் பார்த்துவிட்டு மெசேஜில் பாராட்டினார். அவருடைய பாராட்டுக்கு ரொம்ப சந்தோஷப்பட வைத்தது"
இவ்வாறு சாந்தனு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago