2017 ஆம் ஆண்டு வெளியான 'ஒரு அடார் லவ்' என்ற படத்தில் இடம்பெற்ற ஒரே காட்சியின் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவர் ப்ரியா பிரகாஷ் வாரியர்.
அதன் மூலம் சமூக வலைதளங்களில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகளும் அவருக்கு வந்தன. பாலிவுட் நடிகர்களைப் பின்னுக்கு தள்ளும் அளவுக்கு அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை 72 லட்சம் பேர் பின்தொடர்ந்து வந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்திலிருந்து ப்ரியா பிரகாஷ் வாரியர் வெளியேறினார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிண்டல்களும், வசைகளும் அதிகரித்து வந்ததே அவர் வெளியேறியதற்கான காரணம் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் இன்ஸ்டாகிராமிற்குள் வந்த ப்ரியா பிரகாஷ் வாரியர் இன்ஸ்டாகிராம் தளத்திலிருந்து தான் வெளியேறியதற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இன்ஸ்டாகிராம் வந்துள்ளேன். நான் ஏன் என்னுடைய இன்ஸ்டா கணக்கிலிருந்து சிறிது காலம் வெளியேறியிருந்தேன் என்று பலரும் என்னிடம் கேட்டிருந்தீர்கள்.
ஊரடங்கு காலத்தில் அனைவரும் இணையத்திலேயே இருக்கும்போது நான் மட்டும் ஏன் சமூக வலைதளத்திலிருந்து விலகினேன் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இதற்கு பின்னால் பெரிய காரணங்கள் ஒன்றும் இல்லை. என்னை பொறுத்தவரை மற்ற விஷயங்களை என் மன அமைதி மட்டுமே எனக்கு முக்கியம். நான் எந்த காரணத்துக்காக செய்தேன் என்பது முக்கியமில்லை ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக நான் மன அமைதியுடன் இருந்தேன்.
ஆனா இது எனக்கு தொழில்ரீதியான தளம் என்பதால் என்னால் நீண்டநாள் இதிலிருந்து விலகியிருக்கமுடியாது. இரண்டு வாரங்களே விலகியிருந்தாலும் உண்மையில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். எந்த காலத்திலும் சமூக வலைதளங்கள் என் மனதை காயப்படுத்திவிடக் கூடாது என்று நினைப்பேன்.
ஆனால் சமீபகாலமாக அது என் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியது. எனவே ஒரு சிறிய இடைவேளை எடுத்துக் கொள்ள முடிவு செய்தேன். ஆனால் இதற்கு பலரும் பல காரணங்களை கூறிவந்ததை பார்க்கமுடிந்தது. இதை ஏன் ஒரு பெரிய பிரச்சினயாக மாற்றுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட விஷயம்.
நான் கேலி செய்யப்படுவது ஒன்றும் புதிதல்ல. தினமும் என் தொடர்பான ஏதாவது ஒரு கேலியை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். எனவே இன்ஸ்டாவிலிருந்து விலகியதற்கு அது காரணமல்ல. மீண்டும் இன்ஸ்டாவிலிருந்து விலகமாட்டேன் என்று சொல்லமுடியாது. தேவைப்பட்டால் மீண்டும் நிச்சயமாக விலகுவேன்.
இவ்வாறு ப்ரியா பிரகாஷ் வாரியர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago