குடியிருப்பில் ஒருவருக்கு கரோனா: 14 நாட்கள் தனிமையில் பிந்து மாதவி

By செய்திப்பிரிவு

குடியிருப்பில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், 14 நாட்கள் தனிமையில் இருக்கவுள்ளார் பிந்து மாதவி.

இந்தியா முழுக்கவே கரோனா அச்சுறுத்தல் என்பது இன்னும் குறைந்தபாடில்லை. இன்று (மே 31) முடிவடையவிருந்த ஊரடங்கை இன்னும் ஒரு மாதக்காலத்துக்கு சில தளர்வுகளுடன் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. மேலும், மாநிலளவில் ஊரடங்கு குறித்து முடிவு செய்து கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கரோனா தொற்று என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா தொற்று உள்ளவர் வீட்டில் மாநகராட்சியினர் ஸ்டிக்கர் ஓட்டி தனிமைப்படுத்தி வருகிறார்கள்.

இதில் நடிகை பிந்து மாதவியும் சிக்கியுள்ளார். அவர் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அந்த குடியிருப்பு வாசலை மாநகராட்சி நிர்வாகிகள் சீல் வைத்துவிட்டனர்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் பிந்து மாதவி "என்னுடைய குடியிருப்பில் இருக்கும் குடியிருப்பவாசிகளில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே எங்கள் கட்டிடத்தில் இருக்கும் அனைவரும் அடுத்த 14 நாட்களுக்கு சுய தனிமையில் இருக்கப்போகிறோம் (One of the resident in my apartment is tested covid positive and so it’s self isolation for all of us in the building for the next 14 days..)" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்