இரட்டை வேடத்தில் சிவகார்த்திகேயன்?

By செய்திப்பிரிவு

அசோக் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'ஹீரோ' படத்தைத் தொடர்ந்து 'டாக்டர்' மற்றும் 'அயலான்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். இரண்டு படங்களையுமே கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து, தான் நடிக்கவுள்ள படத்துக்கு கதைகள் கேட்டு வந்தார் சிவகார்த்திகேயன்.

பல கதைகளில் அட்லியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அசோக் என்பவர் கூறிய கதை சிவகார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்திருந்தது. இதனால், அதில் நடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதன் முறையாக இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. 'ரஜினி முருகன்' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே இரட்டை வேடத்தில் வருவார். அசோக் இயக்கவுள்ள படத்தில் படத்தின் கதைக்களமே இரட்டை வேடம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பேச்சுவார்த்தையில் இருக்கும் இந்தப் படம், கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் யாரெல்லாம் சிவகார்த்திகேயனுடன் நடிக்கவுள்ளார்கள், யார் தயாரிப்பாளர் உள்ளிட்டவை அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்