தனது பெயரில் உலவி வரும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கம் போலியானது என்று விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார்.
'பட்டியல்', 'பில்லா', 'ஆரம்பம்' உள்ளிட்ட பல்வேறு வரவேற்பைப் பெற்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். இறுதியாக ஆர்யா, கிருஷ்ணா நடிப்பில் உருவான 'யட்சன்' படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
அதற்குப் பிறகு அடுத்தப் படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். இறுதியாக 'ஷேர்ஷா' என்ற இந்திப் படத்தை இயக்கி வருகிறார் விஷ்ணுவர்தன். தர்மா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் துவங்கவுள்ளது.
இதனிடையே, விஷ்ணுவர்தன் தனது பெயரில் உலவி வரும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் போலியானவை எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
"எனக்கு ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இல்லை. என் பெயரில் இருப்பவை போலியானவை. அவற்றை என் பெயரைப் பயன்படுத்தி தவறாக பயன்படுத்துகிறார்கள். அவற்றை போலியானது என ரிப்போர்ட் செய்யுங்கள்"
இவ்வாறு இயக்குநர் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார்
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago