மீண்டும் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநராகும் சேரன்

By செய்திப்பிரிவு

கே.எஸ்.ரவிகுமார் இயக்கவுள்ள புதிய படத்தில் அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிய சேரன் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் புதிய முயற்சியாக சதவீத அடிப்படையில் சம்பள முறையை வைத்துப் படமொன்று தயாராகிறது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கவுள்ள இந்தப் படத்தில் சத்யராஜ் நாயகனாக நடிக்கவுள்ளார். பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட சிலர் கவுரவக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். ஆர்.பி.செளத்ரி மற்றும் திருப்பூர் சுப்பிரமணியம் இணைந்து திரையுலகினர் மக்களிடையே க்ரவுட் ஃபண்டிங் முறையைப் பின்பற்றித் தயாரிக்கிறார்கள்.

இந்த முயற்சி தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. பல்வேறு முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் இதில் தங்களுடைய பங்கு இருக்க வேண்டும் என்று தங்களது விருப்பத்தைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்தப் படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் தான் சேரன். அதற்குப் பிறகே இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படம் உருவாக்கம் தொடர்பாக திருப்பூர் சுப்பிரமணியத்திடம் தனது எண்ணோட்டத்தை தெரிவித்துள்ளார் சேரன்.

என்னவென்றால், இந்தப் படம் கண்டிப்பாக வெற்றியடைந்து, திரையுலகில் ஒரு மாற்றத்தையே உருவாக்கும். இந்தக் கதையில் எனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்று கருதுகிறேன் என தெரிவித்துள்ளார் இயக்குநர் சேரன். எப்படியென்றால், கே.எஸ்.ரவிகுமாரிடம் மீண்டும் உதவி இயக்குநராக பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ள சேரன், இந்தப் படத்தில் ஏதாவது ஒரு கேரக்டரில் நடிக்கவும் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதில் நடிப்பதற்கும், உதவி இயக்குநராக பணிபுரிவதற்கும் தனக்கு எவ்வித சம்பளமும் தரவேண்டாம் எனவும் கூறியுள்ளார் இயக்குநர் சேரன். இந்தப் பேச்சால் ஆர்.பி.செளத்ரி மற்றும் திருப்பூர் சுப்பிரமணியம் இருவரும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்