சம்பளம் தரவில்லை, பணம் இல்லை, காரை விற்றேன்: இந்தி சின்னத்திரை நடிகர் மானஸ் ஷா 

By ஐஏஎன்எஸ்

தான் நடித்த சமீபத்திய தொடருக்கான சம்பளம் வராததால் பண நெருக்கடியில் தனது காரை விற்றுள்ளதாகக் கூறியுள்ளார் இந்தி சின்னத்திரை நடிகர் மானஸ் ஷா.

இந்தி சின்னத்திரை வட்டாரத்தில் பிரபலமான நடிகர் மானஸ் ஷா. கடந்த வருடம் மே மாதத்திலிருந்து நவம்பர் மாதம் வரை, ஹமாரி பாஹு சில்க் என்ற தொடரில் நடித்திருக்கிறார். ஆனால் அதற்கான சம்பளம் இன்னமும் அவருக்கு வந்து சேரவில்லை.

இதுபற்றிப் பேசியிருக்கும் ஷா, "இதுபோன்ற சவாலான சூழலை நான் எதிர்கொள்வது இதுவே முதல் முறை. நான் பெரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறேன். நான் வாழ்வதற்காக எனது காரை விற்றுவிட்டேன். எனது வாடகை வீட்டைக் காலி செய்து விட்டு எனது உறவினர் வீட்டில் வசித்து வருகிறேன்.

மே 2, 2019 அன்று அந்தத் தொடரில் நடிக்க ஆரம்பித்தேன். கடைசி படப்பிடிப்பு நவம்பர் 5, 2019 அன்று முடிந்தது. இதுவரை கடந்த ஆண்டு மே மாதத்துக்கான சம்பளம் மட்டுமே அனைவருக்கும் வந்திருக்கிறது. செப்டம்பரில் வர வேண்டிய அந்தப் பணம், அக்டோபரில் வந்தது. அதன் பிறகு அந்தத் தொடரில் நடித்த யாருக்குமே ஒரு ரூபாய் கூட சம்பளப் பாக்கி வரவில்லை.

எனது சொந்த ஊரான அகமதாபாத்தில் என் பெற்றோர்கள் என்னை நம்பி இருக்கின்றனர். அவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும். எனது அப்பா வங்கி ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர்.

இது ஒரு மோசமான சூழல். எனக்கு மட்டுமல்ல, பொழுதுபோக்குத் துறையில் இருக்கும் அனைவருக்குமே. ஏனென்றால் இதுவரை நடித்ததற்கு இன்று வரை சம்பளம் வரவில்லை. இன்று கையில் வேலை இல்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை" என்று வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்