இயக்குநர் மாரி செல்வராஜைப் பாராட்டிய நட்டி

By செய்திப்பிரிவு

'கர்ணன்' இயக்குநர் மாரி செல்வராஜை தனது ட்விட்டர் பதிவில் பாராட்டியுள்ளார் நட்ராஜ்.

'ஜகமே தந்திரம்' படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'கர்ணன்' படத்தின் கவனம் செலுத்தத் தொடங்கினார் தனுஷ். தாணு தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே நடைபெற்றது.

இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மட்டும் பாக்கியுள்ளது. கரோனா அச்சுறுத்தல் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், இந்நேரம் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கும்.

இந்தப் படத்தில் தனுஷுக்கு நாயகியாக ராஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும், மலையாள நடிகர் லால், யோகி பாபு, நட்ராஜ், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் குறித்து நட்ராஜ் தனது ட்விட்டர் பதிவில், "மாரி செல்வராஜ்.. ஆகச் சிறந்த இயக்குநர்.... படம் ரிலீஸ் ஆகட்டும் கொண்டாடுவீங்க" என்று தெரிவித்துள்ளார். அவருக்கு நன்றி கூறும் விதமாக "உங்கள் பிரியத்திற்கும் நம்பிக்கைக்கும் மிக்க நன்றி சார்" என்று குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்