நோலன் மிகவும் பண்பானவர்: ஜான் டேவிட் வாஷிங்டன்

By பிடிஐ

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டெனெட்’. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘டன்கிர்க்’ படத்திற்குப் பிறகு நோலன் இயக்கும் படம் இது. இப்படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பேட்டின்சன், மைக்கேல் கெய்ன், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இரண்டு ட்ரைலர்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. இப்படத்தை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் ஜான் டேவிட் வாஷிங்டன் கூறியுள்ளதாவது:

''படப்பிடிப்பின்போது நோலனிடம் கேட்பதற்கு என்னிடம் பல கேள்விகள் இருந்தன. ஆனால், அவர் மிகவும் பண்புள்ளவர். என்னுடைய எல்லாக் கேள்விகளுக்கும் அமைதியாக பதில் கூறுவார்.

படத்தின் கதையை சரியான முறையில் நடிகர்கள் உள்வாங்கிக் கொள்ளவேண்டியிருந்தது. அப்போதுதான் எங்களுக்குத் தோன்றும் சிறந்த வழியை நாங்கள் கூற இயலும். எங்களிடம் அவர் மிகவும் பண்புடன் நடந்துகொண்டார். அவர் மிகவும் அமைதியானவர்.

இரண்டாவது ட்ரெய்லரில் ரசிகர்களுக்குப் படத்தில் இருக்கும் சில முக்கியமான தகவல்களைக் கொடுக்க நோலன் முடிவு செய்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது''.

இவ்வாறு ஜான் டேவிட் வாஷிங்டன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்