பிரபல கன்னட தொலைக்காட்சி நடிகை மெபீனா மைக்கேல் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 22.
‘பியாதே ஹுதுகிர் ஹல்லி லைஃப்’ என்ற பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியின் வெற்றியாளரான மெபீனா தனது சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கார் கர்நாடக மாநிலம் தேவிஹல்லி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக டிராக்டர் ஒன்றில் மோதியது. இந்த விபத்தில் மெபீனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காரில் மெபீனாவுடன் பயணம் செய்த அவரது நண்பர்கள் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மெபீனாவின் மரணம் குறித்து ‘பியாதே ஹுதுகிர் ஹல்லி லைஃப்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், நடிகருமான அகுல் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
» மீண்டும் டாம் க்ரூஸுடன் இணையும் டக் லிமான்
» ''கிராபிக்ஸ் வேண்டாம்'': ‘டெனெட்’ படத்துக்காக ஒரு விமானத்தையே விலைக்கு வாங்கி வெடிக்க வைத்த நோலன்
''பியாதே ஹுதுகிர் ஹல்லி லைஃப்’ நிகழ்ச்சியின் வெற்றியாளரும் எனக்கு மிகவும் பிடித்த போட்டியாளருமான மெபீனாவின் திடீர் மரணம் அதிர்ச்சியாக உள்ளது. இளம் வயதிலேயே அவருக்கு ஏற்பட்ட நிலையை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய பிரார்த்தனைகளை உரித்தாகுகிறேன்''.
இவ்வாறு அகுல் பாலாஜி கூறியுள்ளார்.
மெபீனாவின் மரணத்துக்கு கன்னட பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
44 mins ago
சினிமா
59 mins ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago