வெப் சீரிஸில் நடிக்கிறாரா வடிவேலு? - ஒரு விளக்கம்

By செய்திப்பிரிவு

வெப் சீரிஸில் வடிவேலு நடிக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு அவரது தரப்பில் மறுப்பு தெரிவித்தார்கள்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படம் தொடர்பாக எழுந்த சர்ச்சையால் திரையுலகிலிருந்து விலகியே இருக்கிறார். இறுதியாக 2017-ம் ஆண்டு வெளியான விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இவருடைய நடிப்பில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை. ஆனால், இணையத்தில் ட்ரெண்ட் என்று எப்போதுமே முன்னணியிலேயே இருக்கிறார். கடந்த சில தினங்களாக வடிவேலு வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளார், கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்று தகவல் வெளியானது.

இது தொடர்பாக வடிவேலு தரப்பில் விசாரித்த போது, "பலரும் பேட்டி கேட்கும் போது "வெப் சீரிஸில் நடிப்பீர்களா" என்று கேட்கும் போது, "கண்டிப்பாக நடிப்பேன்" என்று வடிவேலு சார் சொன்னது உண்மைதான். ஆனால் இது தொடர்பான பேச்சுவார்த்தை எதுவுமே தொடங்கப்படவில்லை. வடிவேலு சார் கூறிய பதிலை மட்டும் வைத்துக் கொண்டு ஆளுக்கு ஆள் ஒவ்வொன்றாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போதைக்கு கமல் சார் நடிக்கவுள்ள 'தலைவன் இருக்கின்றான்' படத்தில் வடிவேலு சார் நடிக்கவுள்ளது உறுதி. வேறு எதுவுமே உறுதியில்லை" என்று தெரிவித்தார்கள். இதன் மூலம் வடிவேலு எந்தவொரு வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

48 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்