ஹாலிவுட் நடிகையை பின்பற்றிய சமந்தா

By செய்திப்பிரிவு

ஹாலிவுட் நடிகையைப் போல தன்னார்வ அமைப்புகளுக்கு நிதி அளித்துள்ளார் சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் சமந்தா. இரண்டு திரையுலகிலுமே முன்னணி நடிகர்களுக்கு நாயகியாக பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நாகார்ஜுனின் மகன் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா.

திருமணத்துக்குப் பிறகும் கூட திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார். எப்போதுமே தனது சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார் சமந்தா. இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியைத் தொட்டது. இதைக் கொண்டாடும் விதமாக, சமந்தா 10 தன்னார்வ அமைப்புகளுக்கு நிதி அளித்துள்ளார்.

தனது 'ஓ பேபி' திரைப்படத்திலிருந்து ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து சமந்தா கூறியிருப்பதாவது:

"ஆஹா, 10 மில்லியன். அழகான நடாலி போர்ட்மேன் செய்ததைப் போல நானும், எனது பெரிய 10 மில்லியன் குடும்பத்தைக் கவுரவிக்கும் வண்ணம் 10 அற்புதமான தன்னார்வ அமைப்புகளுக்கு நிதி அளித்துள்ளேன். அனைவருக்கு என் அன்பு"

இவ்வாறு சமந்தா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்