'கேர்ள் வித் தி ட்ராகன் டாட்டூ' அமேசான் வெப் சீரிஸாகிறது

புகழ்பெற்ற ஸ்பானிஷ் மொழி நாவலான ’கேர்ள் வித் தி ட்ராகன் டாட்டூ 'கதை வரிசையின் நாயகி கதாபாத்திரம் லிஸ்பெத் சாலாண்டரை வைத்துத் தனியாக ஒரு வெப் சீரிஸை அமேசான் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.

ஸ்டீக் லார்ஸன் என்பவர் உருவாக்கிய கதாபாத்திரம் லிஸ்பெத். அந்த கதாபாத்திரத்தை வைத்து ’தி கேர்ள் வித் தி ட்ராகன் டாட்டூ’, ’தி கேர்ள் வூ ப்ளேய்ட் வித் ஃபயர்’, ’தி கேர்ள் வூ கிக்ட் தி ஹார்னட்ஸ் நெஸ்ட்’ ஆகிய மூன்று நாவல்கள் எழுதி முடித்தார். ஸ்டீக் லார்ஸனின் இறப்புக்குப் பின்னரே இந்த மூன்று நாவல்களும் வெளியாயின. மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு மூன்று ஸ்பானிஷ் மொழித் திரைப்படங்கள் வரிசையாக வெளிவந்தன. 2011-ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் இந்தக் கதை திரைப்படமாக வெளியானது. தற்போது அமேசானில் உருவாகும் சீரிஸின் பெயர் இப்போதைக்கு ’தி கேர்ள் வித் தி ட்ராகன் டாட்டூ’ என்று வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது நாவலிலிருந்த கதையின் தொடர்ச்சியாகவோ, திரைப்படக் கதைகளின் தொடர்ச்சியாகவோ இருக்காது என்றும், லிஸ்பெத் கதாபாத்திரத்தை மட்டும் வைத்து சம காலத்தில் நடக்கும் புதிய கதையாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மற்றபடி இதற்கான நடிகர்கள், கதாசிரியர் என யாரும் இன்னும் முடிவாகவில்லை.

சோனி பிக்சர்ஸ் டெலிவிஷனுடன் சேர்ந்து அமேசான் ஸ்டூடியோஸும், லெஃப்ட் பேங் பிச்சர்ஸும் இந்தத் தொடரை தயாரிக்கவுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE