'நெற்றிக்கண்' படத்துக்கான சில சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நயன்தாரா நடித்துள்ளார்.
தன் காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்து வரும் படம் 'நெற்றிக்கண்'. 'அவள்' படத்தின் இயக்குநரான மிலந்த் ராவ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சுமார் 80% முடிந்துள்ளது. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் வரும் முக்கியமான சண்டைக் காட்சி ஒன்றில் டூப் இல்லாமல் நடித்துள்ளார் நயன்தாரா. இந்தக் காட்சிகள் படமாக்கும் போது நயன்தாராவுக்கு படக்குழுவினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். அந்தக் காட்சிகள் அனைத்துமே பார்வையாளர்கள் வெகுவாக ரசிகர்கள் என்று படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள்.
மேலும், இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். கரோனா அச்சம் முடிந்தவுடன், இதர 20% படப்பிடிப்பையும் முடித்து ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
» சம்பள பாக்கியைக் கொடுக்கச் சொல்லி உறுப்பினர்களை வலியுறுத்தும் இந்திய தயாரிப்பாளர் சங்கம்
» புற்றுநோயால் காலமான 27 வயது பாலிவுட் நடிகர்: நண்பர்கள் இரங்கல்
இந்தப் படம் 2011-ம் ஆண்டு வெளியான கொரியன் படமான 'ப்ளைண்ட்' படத்தின் ரீமேக் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாகப் படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago