பாலிவுட் நகைச்சுவை நடிகர் மோஹித் பாகெல் காலமானார், அவருக்கு வயது 27. மோஹித் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
'உவா', 'மிலன் டாக்கீஸ்' சல்மான் கானுடன் 'ரெடி', பரினீதி சோப்ராவுடன் 'ஜபாரியா ஜோடி' உள்ளிட்ட படங்களில் மோஹித் நடித்துள்ளார். ராணி முகர்ஜி, சைஃப் அலி கான் நடிப்பில் உருவாகும் 'பண்டீ அவுர் பப்ளி 2' படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு ஜனவரி மாதம் முதல் அந்தப் படத்தில் நடித்து வந்தார்.
கடந்த ஆறு மாதங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் புற்றுநோய்க்கான சிகிச்சையை மோஹித் மேற்கொண்டிருந்தார். நோயிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்த நேரத்தில் அவர் இறந்துவிட்டதாக அவரது திரையுலக நண்பர், இயக்குநர் ராஜ் சாண்டில்யா (ட்ரீம் கேர்ள் இயக்குநர்)கூறியுள்ளார். நோய் முற்றியதால், சனிக்கிழமை, மதுராவில் இருக்கும் அவரது இல்லத்தில் மோஹித் உயிர் பிரிந்தது.
மோஹித்தின் மரணத்துக்கு பல பாலிவுட் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவருடன் 'ஜபாரியா ஜோடி' படத்தில் நடித்த நடிகை பரீனீதி சோப்ரா, தனது ட்விட்டர் பக்கத்தில், "பணியாற்ற மிக இனிமையான மனிதர்களில் ஒருவர். மகிழ்ச்சியாக, எப்போதும் உற்சாகமாக, நேர்மறை சிந்தனையுடன் இருப்பவர். உங்களுக்கு என் அன்பு மோஹித். உங்கள் ஆமா சாந்தியடையட்டும்" என்று பகிர்ந்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago