'நிசப்தம்' வெளியீடு தொடர்பாக உலவிய வதந்திகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கோனா வெங்கட்.
ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சைலன்ஸ்’. இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக இருந்தது. தமிழில் இந்தப் படத்துக்கு ‘நிசப்தம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கோனா வெங்கட் மற்றும் விஸ்வ பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
சஸ்பென்ஸ் த்ரில்லரான இந்தப் படம், வசனமே இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. இந்தக் கரோனா ஊரடங்கினால் இதன் வெளியீடு பாதிக்கப்பட்டது.
இந்தப் படம் திரையரங்கில் வெளியாகாது என்றும், அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது எனத் தகவல் வெளியானது. இதற்கு படக்குழுவினர் மறுப்பு தெரிவித்தனர். ஆனால், அமேசான் ப்ரைம் வெளியிட்ட அறிக்கையில் இந்தப் படத்தின் பெயர் இடம்பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் செய்திகள் வெளியாகின.
» சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி: தமிழக அரசுக்கு ஸ்டெப்ஸ் அமைப்பு நன்றி
» ‘மிகவும் ஆழமான திரைப்படம்’ - 'ப்ளாக் விடோ' பற்றி மனம் திறக்கும் ஸ்கார்லெட்
இதனைத் தொடர்ந்து படக்குழுவினர், 'நிசப்தம்' திரையரங்கில் தான் வெளியாகும் என்று தெரிவித்தனர். இதனிடையே தொடர்ச்சியாக இந்தப் படம் தொடர்பான வதந்திகள் உலவிக் கொண்டே இருந்த நிலையில் தயாரிப்பாளர் கோனா வெங்கட் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:
"’நிசப்தம்’ வெளியீடு குறித்து ஊடகங்களில் நிறைய யூகங்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. திரையரங்கில் வெளியிடுவதற்குத் தான் நாங்கள் அதிக முக்கியத்துவம் தருகிறோம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். நீண்ட நாட்கள் சூழ்நிலை அந்த முடிவுக்குச் சாதகமாக இல்லையென்றால், அப்போது ஓடிடி தளத்தை வெளியிடுவதற்கான மாற்றாகப் பார்ப்போம். நல்லது நடக்கும் என நம்புவோம்"
இவ்வாறு கோனா வெங்கட் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago