‘மிகவும் ஆழமான திரைப்படம்’ - 'ப்ளாக் விடோ' பற்றி மனம் திறக்கும் ஸ்கார்லெட்

By செய்திப்பிரிவு

’அவெஞ்சர்ஸ்’ சூப்பர் ஹீரோ குழுவில் முக்கிய பெண் கதாபாத்திரமான நடாஷா ரோமானாஃப் எப்படி 'ப்ளாக் விடோ' என்கிற சூப்பர் ஹீரோவாக உருவானார் என்பதே 'ப்ளாக் விடோ' படத்தின் கதை.

'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' திரைப்படத்தில் இந்தக் கதாபாத்திரம் இறந்துவிடும் என்றாலும் இவரது ஆரம்பக் காலம், முன்கதை பற்றி ரசிகர்கள் பலருக்குத் தெரியாது. அதை மனதில் வைத்து மார்வல் இந்தத் திரைப்படத்தை எடுத்துள்ளது. இப்படத்தில் ப்ளாக் விடோவாக ஸ்கார்லெட் ஜொஹன்ஸன் நடித்துள்ளார்.

மார்வல் படங்களின் ரசிகர்களும் இதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருந்தனர். தற்போது இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிப்போவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

'ப்ளாக் விடோ' படம் குறித்து ஸ்கார்லெட் ஜொஹன்ஸன் கூறும்போது ‘இப்படம் சுய மன்னிப்பு மற்றும் முடிவுகளை ஏற்றுக் கொள்வது பற்றி பேசுகிறது. இதற்கு முன்பு நாங்கள் செய்திராத மிகவும் ஆழமான திரைப்படம் இது.’ என்று கூறியுள்ளார்.

மார்வெல் சினிமா உலகத்தின் இரண்டாவது பெண் சூப்பர் ஹீரோ படமான 'ப்ளாக் விடோ' படத்தை கேட் ஷார்ட்லேண்ட் என்ற பெண் இயக்குநர் இயக்கியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்