‘மிஷன் இம்பாசிபிள் 7’ படத்திலிருந்து வெளியேறிய வில்லன் நடிகர்

‘மிஷன் இம்பாசிபிள் 7’ படத்தில் வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிக்கோலஸ் ஹூல்ட் படத்திலிருந்து வெளியேறியுள்ளார்..

டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியாகி உலகமெங்கும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மிஷன் இம்பாசிபிள்’. இப்பட வரிசையில் இதுவரை ஆறு பாகங்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘மிஷன் இம்பாசிபிள்: ஃபால்அவுட்’ திரைப்படம் உலகமெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் இப்படத்தை கிறிஸ்டோபர் மெக்குயரியிடமே அடுத்த இரண்டு பாகங்களை இயக்கும் பொறுப்பை பாராமவுண்ட் நிறுவனம் வழங்கியுள்ளது.

இந்த ஆண்டு தொடங்கவிருந்த ‘மிஷன் இம்பாசிபிள் 7’ படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. மீண்டும் எப்போது படப்பிடிப்புகள் தொடங்கும் என்று தெரியாத நிலையில் இப்படத்தில் டாம் க்ரூஸுக்கு வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிக்கோலஸ் ஹூல்ட் படத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

‘மிஷன் இம்பாசிபிள் 7’ படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த அதே நேரத்தில் ‘தி கிரேட்’ என்னும் காமெடி வெப் சீரிஸ் ஒன்றிலும் ஒப்பந்தமாகி நடித்து வந்தார் ஹூல்ட். இதனால் பாராமவுண்ட் நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்த வேறுபாடேம் அவரது வெளியேற்றத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. தற்போது அவருக்கு பதில் எஸாய் மொரேல்ஸ் வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘மிஷன் இம்பாசிபிள் 7’ 2021 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதியும், ‘மிஷன் இம்பாசிபிள் 8’ 2022 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதியும் வெளியாகும் என்று பாராமவுண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE