41 வயதில் ஹீரோவாக உணர்கிறேன்: ஜோதிகா

By செய்திப்பிரிவு

41 வயதில் ஹீரோவாக உணர்கிறேன் என்று ஜோதிகா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியத் திரையுலகில் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் படமாக அமைந்துள்ளது. மே 29-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தை விளம்பரப்படுத்த, கரோனா லாக்டவுன் என்பதால் ஜூம் செயலி மூலமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஜோதிகா. அப்போது, கதையின் நாயகியாக நடிக்கும் போது உள்ள ப்ளஸ், மைனஸ் குறித்து பேசினார் ஜோதிகா. அதில் அவர் கூறியிருப்பதாவது:

"மைனஸ் என்றால் எப்போதுமே மொழி தான். 3 மடங்கு உழைக்க வேண்டும். இந்த மாதிரியான படங்களில் சுற்றியிருப்பவர்கள் ரொம்ப அழகாக நடிப்பார்கள். இப்போது எனக்கு வரும் கதைகளின் இயக்குநர்களிடம் 2 மாதங்களுக்கு முன்பு ஸ்கிரிப்ட் புக்கை கொடுத்துவிடுங்கள், இல்லையென்றால் பண்ண முடியாது என சொல்லிவிடுகிறேன். ஏனென்றால், முழுக்கதையும் என் தோளில் இருக்கும் போது அதற்கு தகுந்தாற் போல் நான் தயாராக வேண்டும்.

ப்ளஸ் என்றால் நான் ஒரு ஹீரோவாக உணர்கிறேன். இந்தாண்டு எனக்கு 41 வயது ஆகிறது. 41 வயதில் ஹீரோவாக உணர்வது அரிதானது என நினைக்கிறேன்"

இவ்வாறு ஜோதிகா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE