'கொஞ்சம் கரோனா நிறைய காதல்' குறும்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால், நன்றி தெரிவித்து சாந்தனு - கீர்த்தி தம்பதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தலால் 4-வது கட்டமாக மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் எதுவுமே இல்லாததால் பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது, வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது போன்ற விஷயங்களை வலியுறுத்தி பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவற்றை வெளியிட்டு வருகின்றனர்.
இதனிடையே வீட்டிலிருந்தவாறு 'கொஞ்சம் கரோனா நிறைய காதல்' என்ற குறும்படத்தை எழுதி, இயக்கி வெளியிட்டுள்ளார் சாந்தனு. இதில் அவரும், அவரது மனைவி கீர்த்தியும் நடித்துள்ளனர். முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்டுள்ள இந்தக் குறும்படத்துக்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். சமூக வலைதளத்தில் இந்த குறும்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சாந்தனு - கீர்த்தி தம்பதியினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"It’s Better to Light One Candle than to Curse the Darkness” இது என் அப்பாவின் லெட்டர்பேடில் வர்ற அவருக்கு ரொம்ப பிடித்த வாசகம். கரோனா பாதிப்புல உலகமே ஸ்தம்பிச்சு தவிச்சிட்டிருக்கு. நம்ம மத்திய மாநில அரசுகள், பல்வேறு துறையைச் சேர்ந்த நிறைய விஐபிக்கள் விழிப்புணர்வு உருவாக்குவதற்காக, அவங்கவங்க பங்குக்கு மீடியாக்கள் மூலம் பல நல்ல விஷயங்களை பதிவு பண்ணிட்டுருக்காங்க. என் பங்குக்கும் சின்னதாக ஒரு நல்ல விஷயம் பதிவு பண்ண யோசிச்சேன்.
பாக்யராஜ் புள்ள நடிக்கிறேன் என்பதைவிட கதை எழுதி டைரக்ட் பண்ணி ஒரு குறும்படமா வெளியிடுறதுதான் பெருமையான விஷயமா மனசுக்கு பட்டது. அது அப்பாவையும் அம்மாவையும் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுத்தும் என்று தோணுச்சு. கன்னிமுயற்சியா ஒரு சின்ன விஷயம் யோசனை பண்ணி கிக்கியுடன் சேர்ந்து, DADSON Pictures என்னும் பெயரில் வீட்டு லைட்டு வெளிச்சத்துல, செல்போன்லயே அதை எடுத்து (KOCONAKA) “கொஞ்சம் கரோனா நிறைய காதல்” அப்பிடிங்ற டைட்டிலோட சனிக்கிழமை (16.05.2020) மாலை 5 மணிக்கு எங்களது யூடியூப் சேனலில் (With Love Shanthnu Kiki) வெளியிட்டேன் (லேசான ஷிவரிங்குடன்).
ஆனா அது உங்க பேராதரவினால் மரியாதைக்குரிய தமிழ் மக்கள் பேராதரவுனாலயும் ஒரு பெரிய மரியாதையை வாங்கிக் குடுத்துருச்சு. இதுவரைக்கும் 8 லட்சத்தை நெருங்குற அளவுக்கு பலரும் பார்த்து ரசிச்சிருக்காங்க. ரசனை தொடர்ந்து கூடிக்கொண்டே இருக்கு. கிடைச்ச நல்ல பேரை நிலைக்க வைக்கணுமேங்கற பயம், கடமை உணர்ச்சியோட மீண்டும் உங்கள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி கூறி பயணிக்கிறோம்"
இவ்வாறு சாந்தனு - கீர்த்தி ஜோதி தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
55 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago