'த்ரிஷ்யம் 2' குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மோகன்லால்.
2013-ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மலையாளத்தில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியப் படம் 'த்ரிஷ்யம்' தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்துக்குப் பிறகு மோகன்லால் - ஜீத்து ஜோசப் இணைப்பில் 'ராம்' திரைப்படம் உருவாகி வருகிறது. கரோனா ஊரடங்கினால் இதன் படப்பிடிப்பு தொடர முடியாத சூழல் உருவாகியுள்ளது. வெளிநாட்டில் படப்பிடிப்புக்கான சூழல் உருவானவுடன்தான் 'ராம்' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படும்.
'ராம்' படத்துக்கு முன்னதாகவே, மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணி இணைந்து 'த்ரிஷ்யம் 2' படத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அதில் 'த்ரிஷ்யம்' படத்தில் நடித்தவர்களுடன் சிலரும் இணைந்து நடிக்கவுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்கள். ஆனால், எதுவுமே உறுதி செய்யப்பட்டவில்லை.
» கமர்ஷியல் படங்களிலிருந்து வெளியே வந்துவிட்டேன்: ஜோதிகா வெளிப்படை
» மோகன்லால் 60-ம் பிறந்த நாள் ஸ்பெஷல்: கண்களாலும் கம்பீரத்தாலும் உச்சம் தொட்ட நடிப்பு மேதை
தற்போது மோகன்லால் தனது பிறந்த நாளை முன்னிட்டு 'த்ரிஷ்யம் 2' படம் குறித்த அறிவிப்பை ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். அது படத்துக்கான சிறிய அறிமுக டீஸராக மட்டுமே இடம்பெற்றுள்ளது. யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது இன்னும் தெரியவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago