ஆபத்தான டிக் டாக் சவால்: பற்களை இழந்த பாடகர்

By ஐஏஎன்எஸ்

அமெரிக்கப் பாடகர் ஜேஸன் டெரூலோ டிக் டாக் சவால் ஒன்றை முயற்சி செய்யும்போது தனது பற்களை இழந்துள்ளார்.

ஊரடங்கு சமயத்தில் மக்களை மகிழ்விக்கும் பொருட்டு பல்வேறு சுவாரசியமான, அவ்வப்போது சில ஆபத்தான வீடியோக்களையும் ஜேஸன் டெரூலோ டிக் டாக்கில் பதிவேற்றி வருகிறார். ஒரு சவாலில் தோற்றதால் ஒரு பக்கம் புருவத்தை வழித்து எடுப்பது, பல் வரிசையில் முன்னால் ஒரு பல் இல்லை என்று காட்டுவது எனத் தொடர்ந்து பல்வேறு வீடியோக்களை ஜேஸன் பதிவேற்றி வருகிறார்.

அப்படி மின்சார ட்ரில் ஒன்றில் சோளக் கதிரைச் செருகி வைத்து, அந்த ட்ரில் வேகமாகச் சுற்றும்போது சோளத்தைச் சாப்பிடும் ஒரு சவாலை டிக் டாக்கில் ஜேஸன் டெரூலோ மேற்கொண்டார். "மக்களே, இதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா. எனக்கு எப்போதுமே இதை முயற்சி செய்ய வேண்டும் என்று ஆசை" என்று கூறி அந்த வீடியோவை ஆரம்பிக்கிறார் ஜேஸன்.

மின்சார ட்ரில் இயங்க ஆரம்பித்து, சோளம் வேகமாகச் சுற்ற, அதைச் சாப்பிட வாயை வைக்கிறார் ஜேஸன். ஆனால் சட்டென்று வலியில் துடித்து வாயை எடுக்கிறார். அவரது முன் பற்கள் உடைந்திருக்கின்றன. சோளத்திலும் லேசாக ரத்தத் திட்டுகள் போல ஏதோ இருக்கின்றன.

ஜேஸனின் இந்த வீடியோ வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்தும் பலர் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

@jasonderulo

Don’t try this

original sound - jasonderulo

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE