கரோனா நெருக்கடி காரணமாக நிலவும் ஊரடங்கில் பிரபலங்கள் பலரும் தாங்கள் இந்த ஊரடங்கில் பொழுதை எவ்வாறு கழிக்கிறோம் என்பது குறித்த வீடியோ பதிவுகளை தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
அப்படி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது டிக் டாக் பக்கத்தில் இந்தியத் திரைப்படங்கள் தொடர்பான வீடியோக்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். வார்னர் தனது குடும்பத்தினருடன் செய்யும் டிக் டாக் வீடியோக்கள் ஆஸ்திரேலியாவை விட இந்தியாவில் பெரும் வைரலாகி வருகின்றன.
குறிப்பாக சில நாட்களுக்கு முன்பு ‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்தின் புட்ட பொம்மா பாடலுக்கு டேவிட் வார்னர் தனது மனைவி, மகளுடன் செய்த டிக் டாக் வீடியோ ஹிட்டடித்தது. தொடர்ந்து 'பாகுபலி' படத்தின் வசனத்தையும், 'போக்கிரி' படத்தில் மகேஷ்பாபுவின் வசனத்தையும் டிக் டாக் வீடியோவாக வெளியிட்டிருந்தார்.
டேவிட் வார்னரின் 'போக்கிரி' பதிவுக்கு அந்தப் படத்தின் இயக்குநர் பூரி ஜெகந்நாத் "டேவிட்.. இதுதான் நீங்கள்.. உறுதியும் ஆக்ரோஷமும்.. இந்த வசனம் உங்களுக்குத்தான் சரியாகப் பொருந்தும். நீங்கள் ஒரு நடிகராகவும் சிறப்பாக நடிப்பீர்கள். என் படத்தில் நீங்கள் ஒரு காட்சியில் வரவேண்டும் என்று விரும்புகிறேன்" என்று கேட்டது நினைவுகூரத்தக்கது.
» '3 இடியட்ஸ்' படத்தில் நடிக்க இர்ஃபான் கான் பெயரைப் பரிந்துரைத்தேன்: போமன் இரானி
» 'ஜெயில்' வெளியீட்டில் ஒரு வெளிச்சக் கீற்று: இயக்குநர் வசந்தபாலன் தகவல்
தற்போது, டோலிவுட் நட்சத்திரம், ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்த நாளுக்காக வாழ்த்தி ஒரு டிக் டாக் வீடியோவை டேவிட் வார்னர் வெளியிட்டுள்ளார். ஜூனியர் என்.டி.ஆரின் பக்கா லோக்கல் பாடலுக்கு தனது மனைவியுடன் நடனமாடியுள்ள வார்னர், அந்த வீடியோவின் இறுதியில் என்.டி.ஆருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். இந்த வீடியோவை ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
ஆந்திரம் / தெலங்கானா மாநிலத்துக்கான ஐபிஎல் அணியான சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டனாக டேவிட் வார்னர் செயல்படுகிறார். தெலுங்கு பேசும் மக்களின் அபிமானத்தைப் பெறவே தொடர்ந்து அவர் இப்படியான வீடியோக்கள் வெளியிட்டு வருவதாக சிலர் கருத்து கூறியுள்ளனர். குறிப்பாக 'போக்கிரி' படத்தில் மகேஷ்பாபுவின் வசனத்தை அவர் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் சீருடையில் பேசி வெளியிட்டது இந்தக் கருத்துக்கு வலு சேர்த்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago