'மாஸ்டர்' விநியோகஸ்தருக்கு கைகொடுக்கும் விஜய்

By செய்திப்பிரிவு

'மாஸ்டர்' விநியோகஸ்தருக்கு லலித் கைகொடுக்கவுள்ளார் விஜய் என்று தகவல் வெளியாகவுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. தமிழக அரசு இறுதிக்கட்டப் பணிகளுக்கு அனுமதி அளித்துள்ளதால், தற்போது 'மாஸ்டர்' பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் லலித் கைப்பற்றியுள்ளார்.

இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 9-ம் தேதி இப்படத்தை வெளியிட முடியாததால் விநியோகஸ்தர் தரப்புக்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக 'மாஸ்டர்' படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் அனைவரிடமும் லலித் பேசி சமாதானம் செய்துள்ளார்.

இந்தப் படத்தின் விநியோகத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் விஜய்க்கு உடனடியாக அப்டேட் செய்துவிடுகிறார் லலித். மேலும் டிஜிட்டல் நிறுவனம் எவ்வளவு கொடுக்க முன்வந்தது போன்ற தகவலை அப்டேட் செய்யும் போதுதான், 'என் படம் ரசிகர்கள் ரசிப்பதற்கே. எவ்வளவு மாதம் ஆனாலும் காத்திருக்கலாம்' என்று விஜய் தெரிவித்துள்ளார்.

'மாஸ்டர்' வெளியீடு தாமதமாவதால் கட்டப்படும் வட்டி உள்ளிட்டவையும் விஜய் தெரிந்து வைத்துள்ளார். இதனால் விஜய்யின் கால்ஷீட் லலித்துக்குக் கிடைக்க வாய்ப்புள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

'96' படத்தின் வெளியீட்டுக்கு லலித் உதவி செய்ததால், அவருடைய நிறுவனத்துக்கு கால்ஷீட் கொடுத்து 'துக்ளக்' படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அதே பாணியை இப்போது விஜய்யும் பின்பற்றவுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்