ராபர்ட் டவுனி மிகவும் இலகுவான மனிதர் - ‘கேப்டன் அமெரிக்கா’ க்றிஸ் எவான்ஸ் புகழாரம்

By ஐஏஎன்எஸ்

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மார்வெல் படங்களில் இணைந்து நடித்தவர்கள் ராபர்ட் டவுனி ஜூனியர் (அயர்ன் மேன்) மற்றும் க்றிஸ் எவான்ஸ் (கேப்டன் அமெரிக்கா). கடந்த வருடம் வெளியான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்தோடு இருவரது ஒப்பந்தமும் முடிந்தது.

இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ராபர்ட் டவுனி பற்றியும் மார்வெல் படங்கள் குறித்தும் மனம் திறந்துள்ளார் க்றிஸ் எவான்ஸ். அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

''டவுனி மிகவும் இலகுவான மனிதர். அவரிடம் பழகுவதில் யாருக்கும் எந்தக் கடினமும் இருக்காது. மார்வெல் படங்களின் கனத்தை அவர் மிகவும் புரிந்துகொண்டார் என்றே நினைக்கிறேன். ஒருவருடைய வெற்றியை அவர் புரிந்துகொள்வார். எங்கள் அனைவரது வெற்றியையும் அவர் புரிந்துகொண்டார்.

‘அவெஞ்சர்ஸ்’ படங்கள் மட்டுமல்லாது எங்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட படங்களிலும் கூட அவர் எங்களுக்கான வழிகளைக் காண உதவினார். படப்பிடிப்பு தளங்களில் அவர் இல்லாத போதும் கூட அவருடைய ஆதரவை நான் உணர்ந்தேன்.

வாழ்க்கையில் விளிம்பில் இருக்கும் மக்களை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வருவது மிகவும் சிறந்த விஷயம். இந்தப் படங்களை ஆரம்பிக்கும்போது எங்களோடு அப்படி ஏராளமான மக்கள் இருந்தனர். இதில்தான் மார்வெல் மிகவும் சிறந்து விளங்குகிறது. அவர்களை நடத்தை ரீதியாக மட்டுமல்லாமல், உணர்வு ரீதியாகவும் மேம்படுத்தியது''.

இவ்வாறு க்றிஸ் எவான்ஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்