தெலுங்கு நடிகர் நிகில் சித்தார்த் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்டுள்ளார். நிகிலின் பண்ணை வீட்டில் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்க இந்தத் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
'ஹாப்பி டேஸ்', 'கிர்க் பார்டி' உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நிகில் சித்தார்த். பல்லவி வர்மா என்ற மருத்துவரை கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் முடிந்தது. ஏப்ரல் மாதம் இவர்கள் திருமணம் திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் ஊரடங்கின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
ஊரடங்கு எப்போது தளர்த்தப்படும் என்ற தெரியாத நிலையில் திருமண தேதியை உறுதி செய்யாமலேயே இருந்தனர். இப்போது நான்காவது கட்டமாகவும் ஊரடங்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மே 14 திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
» தொடர் நலம் விசாரிப்புகள்: நடந்தது என்ன? - ராதாரவி வீடியோவில் விளக்கம்
» நள்ளிரவுப் பயணம்; மொழி தெரியாமல் நடை: வெனிஸ் நகரில் 'திகில்' அனுபவம் குறித்து ராஷ்மிகா பகிர்வு
ஹைதராபாத்தில் இருக்கும் நிகிலின் பண்ணை வீட்டிலேயே இந்தத் திருமணம் நடந்து முடிந்தது. அரசின் விதிமுறைகளின் படி, குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் மட்டும் இதில் பங்கேற்றனர். வந்தவர்களுக்கு சானிடைஸரும், முகக் கவசமும் கொடுக்கப்பட்டது.
ஊரடங்கு முடிந்து சகஜ நிலை திரும்பிய பின் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சியை இருவரும் திட்டமிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago