அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை 80 ஆயிரத்தைக் கடந்தது. மொத்தம் 14 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் அமெரிக்க அரசு திணறி வருகிறது.
இந்நிலையில் தனது மகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக பிரபல ஹாலிவுட் நடிகர் மேட் டேமன் தெரிவித்துள்ளார்.
'தி லாஸ்ட் டூயல்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக குடும்பத்தோடு அயர்லாந்து நாட்டின் டப்லின் நகரில் இருந்தார் மேட் டேமன். அப்போது அமெரிக்காவில் கரோனா அச்சுறுத்தலால் கடும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மேட் டேமனால் அமெரிக்கா திரும்பமுடியாத நிலை ஏற்பட்டது.
ஆனால், மேட் டேமனின் மகளான அலெக்ஸியா மட்டும் அயர்லாந்து செல்லாமல் நியூயார்க்கிலேயே இருந்துள்ளார். இதனால் அவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து மேட் டேமன் கூறியிருப்பதாவது:
''எனது மகள் அலெக்ஸியா நியூயார்க் நகரில் இருக்கிறார். அவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவரது அறைத்தோழிகளின் உதவியால் தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறார்.
இந்த மாத இறுதியில் நாங்கள் மீண்டும் அவரோடு இணைவோம். நாங்கள் அனைவரும் நன்றாக இருக்கிறோம். என் அம்மாவும், என் மனைவியின் அம்மாவும் கூட நன்றாக இருக்கிறார்கள். இந்த வைரஸ் முதியவர்களுக்கு மிகவும் அச்சுறுத்தலானது''.
இவ்வாறு மேட் டேமன் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
30 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago