நான் 'ஹல்க்' கதாபாத்திரத்தில் நடிக்கக் காரணம் 'அயர்ன் மேன்' டவுனி தான்: மார்க் ரஃபல்லோ 

By செய்திப்பிரிவு

'ஹல்க்' கதாபாத்திரத்தில் தான் நடிக்கக் காரணம் ராபர்ட் டவுனி ஜூனியர்தான் என்று நடிகர் மார்க் ரஃபல்லோ கூறியுள்ளார்.

'அவெஞ்சர்ஸ்' படங்களில் ப்ரூஸ் பேனர் என்கிற ஹல்க் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானவர் நடிகர் மார்க் ரஃபல்லோ. 'தார் ராக்னராக்' உட்பட 5 படங்களில் அவர் ஹல்க் / ப்ரூஸ் பேனர் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ஆனால் முதலில் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க அணுகியபோது தான் பயந்ததாகவும், தயங்கியதாகவும் ரஃபல்லோ கூறியுள்ளார். "நான் அப்போது சிறு சிறு படங்களில் நடித்து வந்தேன். ஹல்க் கதாபாத்திரத்தில் அதற்கு முன் வரை சிறப்பாகச் செய்யப்பட்ட விஷயத்தில் என்னால் கூடுதலாக என்ன செய்ய முடியும் என்பது எனக்குத் தெரியவில்லை. எனவே, நான் இதற்குச் சரியானவனா என்று தெரியவில்லை எனக் கூறினேன். அதற்கு ஜாஸ் வீடன் (இயக்குநர்) 'ஆம் நீங்கள் சரியான நபர் தான்' என்றார்.

பிறகு எனக்கு டவுனியிடமிருந்து அழைப்பு வந்தது. நான் தயங்குகிறேன் என்பது பற்றி அவருக்குத் தெரியவந்திருக்கும் என நினைக்கிறேன். அவர், 'ரஃபல்லோ, இதைச் செய்வோம். நாம் பார்த்துக் கொள்ளலாம்' என அயர்ன் மேன் போலவே சொன்னார். அதன் பிறகு நான், 'சரி நான் இதில் நடிக்கிறேன்' என்ற முடிவுக்கு வந்தேன்" என்று ரஃபல்லோ கூறியுள்ளார்.

அண்மையில் ரஃபல்லோ, ஹல்க் பற்றி தனியாக ஒரு படத்தை எடுக்கலாமா என தயாரிப்பாளர் தரப்பிடம் யோசனை தெரிவித்துள்ளதாக ஒரு பேட்டியில் பகிர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மார்க் ரஃபல்லோவும், ராபர்ட் டவுனி ஜூனியரும் 2007 ஆம் ஆண்டே 'ஸோடியாக்' என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்