'விஸ்வாசம்' படத்தின் சில காட்சிகளை அஜித்தே படமாக்கியது உறுதியாகியுள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், ஜெகபதி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விஸ்வாசம்'. 2019-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி இப்படம் வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தமிழக வசூலில் ரஜினியின் 'பேட்ட' படத்தின் வசூலை முறியடித்தது 'விஸ்வாசம்'. இந்தப் படத்தில் சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவருக்கும் நல்ல லாபம் கொடுத்தது.
இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் பெரும் விலை கொடுத்துக் கைப்பற்றியது. தற்போது கரோனா ஊரடங்கினால், தாங்கள் கைப்பற்றிய படங்களின் பின்னணி சுவாரசியங்கள் குறித்து வெளியிட்டுள்ளது.
» கரோனா நெருக்கடியால் கஷ்டப்படும் 'ஆட்டோகிராஃப்' கோமகன் குழுவினர்: நன்மைகள் நடக்கும் என நம்பிக்கை
அதில் 'விஸ்வாசம்' படத்தின் தொடக்கத்தில் வரும் சில ட்ரோன் காட்சிகளை அஜித்தே படமாக்கியுள்ளார் எனத் தெரிவித்துள்ளது. அதில் தயாரிப்பாளர்களின் பெயர் வரும் காட்சி அவர் காட்சிப்படுத்தியதுதான் என்றும் கூறியுள்ளது. மேலும், அஜித் ட்ரோனை இயக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
சமீபமாக அஜித் ட்ரோன் காட்சிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் பயிற்சியளித்த தக்ஷா டீம், ஏரோ இந்தியா கண்காட்சியின் ஓர் அங்கமான ட்ரோன் ஒலிம்பிக்ஸ் போட்டியில், மூன்று பிரிவுகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago