கரோனா அச்சுறுத்தல் தொடர்பாக காவல்துறையினரைப் பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஆண்ட்ரியா
தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட் மூலமாக பரவியதால், அருகிலிருக்கும் மாவட்டங்களுக்கும் பரவி வருகிறது. இதனால், கரோனா பரிசோதனை துரிதப்படுத்தி வருகிறது தமிழக அரசு.
இந்த கரோனா ஊரடங்கிலும் தமிழக காவல்துறையினர் இடைவிடாது பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களது பணிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே காவல்துறையினரில் 75-க்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒருவித அச்ச உணர்வை காவல்துறையினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
தற்போது காவல்துறையினருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதைத் தொடர்ந்து ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
» பாலசந்தர் மாதிரி ஒரு குருவைப் பார்க்கவே முடியாது: இயக்குநர் வஸந்த் புகழாரம்
» அஜித் படத்தைத் தவறவிட்ட தருணம்: பின்னணி கூறும் இயக்குநர் ராசி அழகப்பன்
"நாட்டுக்காகவும், எங்கள் அனைவருக்காகவும் கடினமாக உழைக்கும் உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. வைரஸை எதிர்த்து கடுமையாக போராடு வருகிறீர்கள். நம்பிக்கை இழந்து விடாதீர்கள். எல்லாம் சரியாகும். அனைத்தும் மீண்டும் நல்லபடியாக மாறும் என்று நம்புகிறோம். நன்றி"
இவ்வாறு ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago