விழுப்புரம் சிறுமி மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயபால். இவரது மகள் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 10-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் ஏசகன் (எ) கலியமூர்த்தி மற்றும் முன்னாள் கவுன்சிலர் கணபதி மகன் முருகன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் பெட்ரோல் ஊற்றி மாணவியை உயிருடன் எரித்துக் கொலை செய்ய முயன்றனர்.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வரவே குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர். படுகாயமடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதற்கு முன்பாகவே தன்னை ஏசகனும், முருகனும் பெட்ரோல் ஊற்றி எரித்ததை நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் கொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போது சிறுமியின் மரணம் தொடர்பாக நடிகர் விவேக் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"மனித மனங்கள் ஈரத்துடனும் இரக்கத்துடனும் சக மனிதனைப் பேண வேண்டிய இத்தருணத்தில் ஒரு 15 வயதுப் பெண்னை ஈவு இரக்கமின்றி தீயிட்டது பெரும் சோகம். அந்தச் சகோதரிக்கு நீதி கிடைக்க வேண்டும்".
இவ்வாறு விவேக் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago