தகுதிச் சுற்றுகளுக்கு முன்பாகவே திரும்பி வர டிக்கெட் எடுத்த 1983 கிரிக்கெட் அணி- '83' திரைப்படம் விவரிக்கும் சுவாரசிய சம்பவம்

By செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றை மாற்றி எழுதி இந்திய இளம் வீரர்களுக்கு உத்வேகமூட்டி எழுச்சி பெறச் செய்த நிகழ்வுதான் 1983 உலகக்கோப்பையை இந்தியா வென்ற தருணமாகும். வலுவான கிளைவ் லாய்ட் தலைமை மே.இ.தீவுகள் அணியை முதல் போட்டியிலும் இறுதிப் போட்டியிலும் வீழ்த்தி வரலாறு படைத்தது இந்திய அணி, அதுவும் இங்கிலாந்து மண்ணில்.

அந்த அணியை கபில்ஸ் டெவில்ஸ் என்று ஆங்கில ஊடகங்கள் செல்லமாக அழைக்கத் தொடங்கின. இது தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டை கதைக்களமாகக் கொண்டு கபீர் கான் இயக்கத்தில் உருவாகும் '83' திரைப்படம், ஆச்சரியத்தக்க முறையில், 1983ஆம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்று வெற்றி வாகை சூடிய உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டது. உலகக் கோப்பைக்காண பயணத்தில் நடந்த பல சுவையான சம்பவங்களையும் உண்மைச் சம்பவங்களையும் விவரிக்கிறது இப்படம்.

உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் ஜூன் 20ஆம் தேதி வரை என்றும், அரை இறுதிச் சுற்று 22ஆம் தேதி எனவும் அட்டவணைப் படுத்தப்பட்டிருந்தன. ஆனால் இந்திய கிரிக்கெட் அணி நாடு திரும்புவதற்கான பயணச் சீட்டுகள் இந்தத் தேதிகளுக்கு முன்னதாகவே பதிவு செய்யப்பட்டிருந்தன.

போட்டிகளில் விளையாடிவிட்டு ஜூன் 20ஆம் தேதி இரவு நியூயார்க் செல்ல இந்திய அணியைச் சேர்ந்த ஏழு வீரர்கள் பயணச்சீட்டு பதிவு செய்திருந்தனர். அப்போதுதான் திருமண பந்தத்தில் நுழைந்த இவர்களில் சிலர் தங்கள் மனைவிகளுடன் இந்த வெளிநாட்டுப் பயணத்தைத் திட்டமிட்டிருந்தனர்.

இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதிச் சுற்றுவரை வரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏன் இந்திய அணியினரே இதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் இவற்றுக்கெல்லாம் மாறாக, இந்திய அணி அனைத்து ஆட்டங்களிலும் வெகு சிறப்பாக விளையாடியதுடன், கிரிக்கெட் சரித்திரத்திலும் இடம் பெற்று விட்டது.

1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்வதற்கு முன்பு, விளையாட்டுக்கான உலக வரைபடத்தில் இந்தியாவுக்கு இடமே இல்லை என்ற நிலைதான் காணப்பட்டது. ஆனால் யாருமே எதிர்பாரா வகையில் இந்தியா வெகு சிறப்பாக விளையாடி, உலகக் கோப்பையை வென்று வெற்றி வாகை சூடி சரித்திரத்தில் இடம் பிடித்தது.

அணித் தலைவர் கபில் தேவ்வை அணியில் உள்ளவர்கள் செல்லமாக கபில் டெவில் என்று அழைத்ததையும், இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற அனுபவத்தையும் வெண்திரையில் வெளியாகும் '83' திரைப்படத்தில் கண்டு மகிழலாம்.

கபீர்கான் பிலிம்ஸ் தயாரிக்கும்'83' திரைப்படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயிண்மெண்ட் மற்றும் ஃபாண்டம் பிலிம்ஸ் இணைந்து வழங்குகிறது. தீபிகா படுகோன், கபீர் கான், விஷ்ணுவர்தன் இந்தூரி, சஜீத் நாடியாவாலா, ஃபாண்டம் பிலிம்ஸ், ரிலையன்ஸ் என்டர்டெயிண்மெண்ட் மற்றும் 83 பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கிறது.

இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் '83' திரைப்படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயிண்மெண்ட் மற்றும் பி.வி.ஆர். நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகின்றன.

விளையாட்டை விறுவிறுப்பான திரைக்காவியமாக்கியிருக்கும் '83' படத்தை காணத் தயாராக இருங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்