விஜய்க்கு வேண்டுகோள் விடுத்துள்ள லாரன்ஸ்

By செய்திப்பிரிவு

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் மாற்றுத்திறனாளி வீடியோ தொடர்பாக விஜய்க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் லாரன்ஸ்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'வாத்தி கம்மிங்', 'வாத்தி ரைய்டு', 'குட்டி ஸ்டோரி' உள்ளிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பல்வேறு சமூக வலைதளங்களில் இந்தப் பாடல்களுக்கு நடனமாடி பலரும் பதிவேற்றியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் கைகளை இழந்த மாற்றுத்திறனாளி ஒருவர் ‘வாத்தி கமிங்’ பாடலின் இசையை வாசிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வந்தனர்.

இதற்கு அனிருத்தும் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனிடையே, இந்த வீடியோ தொடர்பாக ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:

"எனது நண்பர் விஜய் மற்றும் அனிருத் அவர்களுக்கு

இது தான்சேன். எனது மாற்றுத் திறனாளி குழுவில் இருப்பவர். காஞ்சனா படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த ஊரடங்கு சமயத்தில் 3 நாட்கள் பயிற்சி செய்து 'மாஸ்டர்' படத்தின் ஒரு பாடலை வாசித்திருக்கிறார். இவரது கனவே அனிருத் அவர்களின் இசையில் ஒரு சிறு பகுதி வாசிக்க வேண்டும் என்பதும், விஜய் அவர்கள் முன்னிலையில் இதை வாசிக்க வேண்டும் என்பதுதான். தயவு செய்து இந்த லிங்க்கைப் பாருங்கள். இவரது கனவு நனவாக வேண்டும் என்று விரும்புகிறேன்"

இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்