தனுஷ் நடிப்பில் வெளியான 'பட்டாஸ்' திரைப்படம் தொலைக்காட்சி ஒளிபரப்பில் சாதனை புரிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியான படம் 'பட்டாஸ்'. துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் தனுஷ், சிநேகா, மெஹ்ரீன், நவீன் சந்திரா, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றிய சன் தொலைக்காட்சி நிறுவனம், மே 1-ம் தேதி ஒளிபரப்பியது. இதில் 1,31,49,000 என்ற எண்ணிக்கையைத் தொட்டுள்ளது. இதனை BARC நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், தனுஷ் நடித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான படங்களில் அதிக எண்ணிக்கையைத் தொட்ட படம் என்ற மாபெரும் சாதனையை 'பட்டாஸ்' நிகழ்த்தியுள்ளது.
இந்தச் சாதனை தொடர்பாக சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் கூறியிருப்பதாவது:
» 'துப்பாக்கி 2' வதந்தி: முற்றுப்புள்ளி வைத்த சந்தோஷ் சிவன்
» அரசாங்க அமைப்பைக் கேள்வி கேட்போமா? நகர்ந்து விடுவோமா? - இயக்குநர் வெற்றிமாறன்
"எந்த வகைப் படம் என்றாலும் குடும்பம் முழுமைக்குமான தரமான பொழுது போக்கு என்பது தான் எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் தாரக மந்திரம். சர்வதேச ரசிகர்களையும் மகிழ்விக்கும் விதமான நல்ல படங்களைத் தர வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். மேலும் 'பட்டாஸ்' படத்தில் இரட்டை வேடங்களில் தனுஷ் அற்புதமாக நடித்திருந்தது படத்தின் சிறப்பம்சமாக அமைந்ததுடன், அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. இதற்காக படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்"
இவ்வாறு சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தெரிவித்துள்ளார்
முக்கிய செய்திகள்
சினிமா
10 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago