ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'திட்டம் இரண்டு' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் 'திட்டம் இரண்டு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவருடைய நடிப்பில் தமிழில் 'க/பெ ரணசிங்கம்', 'துருவ நட்சத்திரம்', 'இது வேதாளம் சொல்லும் கதை', 'இடம் பொருள் ஏவல்' மற்றும் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து வரும் படம் ஆகியவை வெளியாக உள்ளன.

தெலுங்கில் நானி நடிக்கவுள்ள 'டக் ஜெகதீஷ்' படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவை தவிர்த்து பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதில் விக்னேஷ் கார்த்திக் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே உடனே ஒப்புக்கொண்டார்.

'Yours Shamefully' என்ற குறும்படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் விக்னேஷ் கார்த்திக் என்பது குறிப்பிடத்தக்கது. மிஸ்ட்ரி த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்துக்கு 'திட்டம் இரண்டு' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. தினேஷ் கண்ணன் மற்றும் வினோத் குமார் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

ஒளிப்பதிவாளராக கோகுல் பினாய், இசையமைப்பாளராக சதீஷ் ரகுநாதன், எடிட்டராக சி.எஸ். பிரேம் குமார், கலை இயக்குநராக ராகுல் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. அடுத்தகட்டப் படப்பிடிப்பு கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் தொடங்கவுள்ளது.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

39 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்