'வடசென்னை 2' எப்போது உருவாகும் என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் 'வடசென்னை'. 2018-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும், இந்தப் படம் 2 பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
முதல் பாகத்தின் முடிவிலேயே, கதை இன்னும் முற்றுபெறாமல் இருக்கிறது. இதனால், 2-ம் பாகம் எப்போது என்பதே தெரியாமல் இருக்கிறது. தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைந்து 'வடசென்னை 2' படத்தை எப்போது தொடங்குவார்கள் என்ற கேள்வி அனைவருக்குள்ளும் இருக்கிறது.
தற்போது 'வடசென்னை 2' குறித்து இயக்குநர் வெற்றிமாறன், " 'வடசென்னை 2' படத்துக்கு இன்னும் நேரமாகும். அதை ஒரு வெப்சீரிஸாக (இரண்டு சீஸன்களாக) எடுக்கலாமா என்ற யோசனையும் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
» இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பிறந்த நாள் ஸ்பெஷல்: அடித்தட்டு மக்களுக்கான அரசியலைப் பேசும் படைப்பாளி
» பிரபு சாலமன் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களின் மதிப்பைப் பெற்ற படைப்பாளி
நெட்ஃபிளிக்ஸ் தளத்துக்காக இயக்கி வரும் ஆந்தலாஜி குறித்து இயக்குநர் வெற்றிமாறன், "ஆந்தாலஜி படத்தை கிட்டத்தட்ட முடித்துவிட்டேன். இன்னும் இரண்டு நாட்களில் இறுதிக்கட்ட வேலைகளை முடித்துவிடுவேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago