கரோனா அச்சுறுத்தல்: தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தள்ளிவைப்பு

By செய்திப்பிரிவு

கரோனா அச்சுறுத்தல் காரணமாக தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு பணிகள் தடைப்பட்டு இருக்கிறது. இதனிடையே, ஜூன் 21-ம் தேதி தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெறும் என்றும், அதற்கான வழிமுறைகள் என்ன என்பதையும் தனி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இது பல தயாரிப்பாளர்களை ஆச்சரியப்படுத்தியது. கரோனா காலத்தில் தேர்தலா என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள். மேலும், சிலர் இந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்கள்.

தற்போது தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தொடர்பாக தனி அலுவலர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ 2020-2022ம்‌ ஆண்டுக்கான நிர்வாகிகள்‌ மற்றும்‌ நிர்வாகக்குழு உறுப்பினர்கள்‌ தேர்தலுக்கான அட்டவணை கடந்த ஏப்ரல்‌ மாதம்‌ 16-ம்‌ தேதி அன்று வெளியிடப்பட்டது.

இந்நிலையில்‌, தமிழ்நாட்டில்‌ குறிப்பாக சென்னையில்‌, கரோனா வைரஸ்‌ (COVID - 19) மிகவும்‌ மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருவதைக் கருத்தில்‌ கொண்டும்‌, மேலும்‌, தயாரிப்பாளர்கள்‌ சங்க தேர்தல்‌ நடத்த கால அவகாசம்‌ வேண்டி தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில்‌ நிலுவையில்‌ இருப்பதாலும்‌, மேற்படி சங்கத்தின்‌ தோதலை ஏற்கனவே அறிவித்த தேதியில்‌ நடத்த இயலாத சூழ்நிலை இருக்கின்ற காரணத்தினால்‌, தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ திருத்தப்பட்ட தேர்தல்‌ அட்டவணை வரவிருக்கும்‌ சென்னை உயா்ற்திமன்ற உத்தரவின்‌ அடிப்படையில்‌ பின்னர்‌ அறிவிக்கப்படும்‌ என்பதை இதன்‌ மூலம்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது"

இவ்வாறு தனி அலுவலர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE