விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தின் இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தல் முடிவுக்கு வந்தபின், புதிய வெளியீட்டுத் தேதி முடிவு செய்யப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தப் படத்துக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இதனை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார். 'துப்பாக்கி', 'கத்தி', 'சர்கார்' ஆகிய படங்களைத் தொடர்ந்து 4-வது முறையாக இந்தக் கூட்டணி இணைகிறது. இதனால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்தப் படம் 'துப்பாக்கி 2' ஆக இருக்க வாய்ப்புகள் அதிகம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்தக் கூட்டணியில் இசையமைப்பாளர் தமன் இணைந்துள்ளார். கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் இந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
» என்னைக் கேள்வி கேட்க நீங்கள் யார்? - போலிச் செய்தி வெளியிட்ட இணையதளத்தைச் சாடிய விஜய் தேவரகொண்டா
» ஒப்புக்கொண்ட சம்பளத்தில் 25 சதவீதம் குறைத்துக் கொண்ட விஜய் ஆண்டனி
சமீபத்தில் தமன் இசையில் 'அலா வைகுந்தபுரம்லோ' தெலுங்குப் படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் தமனுக்குப் பல்வேறு பெரிய நாயகர்களின் படங்களுக்கு இசையமைக்க வாய்ப்புகள் வருகின்றன. அதில் ஒன்றுதான் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் படமும். விஜய் படம் என்பதால் பெரும் மகிழ்ச்சியுடன் உடனே தமன் ஒப்புக் கொண்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
55 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago