தனது பெயரில் சமூக வலைதளத்தில் போலிக் கணக்குகள் இருப்பதால், நிவேதா பெத்துராஜ் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் 'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நாயகியாக நடித்தார். தெலுங்குப் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வரவே, இப்போது பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ்.
தற்போது சமூக வலைதளத்தில் போலி ட்விட்டர் கணக்குகள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு பிரபலங்களும் இது தொடர்பாக புகார் அளித்து வருகிறார்கள். இதனிடையே, நிவேதா பெத்துராஜ் பெயரிலும் பல கணக்குகள் இருக்கின்றன.
இது தொடர்பாக நிவேதா பெத்துராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
"நான் ட்விட்டர் தளத்தில் @nivetha_tweets என்ற கணக்கை மட்டுமே நிர்வகித்து வருகிறேன். எனது பெயரில் பல போலியான ட்விட்டர் கணக்குகள் இருப்பதால் இந்த வீடியோவை வெளியிடுகிறேன். ட்விட்டர் தளம் போலியான ட்விட்டர் கணக்குகளை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த கரோனா அச்சுறுத்தலால் அதற்கு கொஞ்சம் காலமெடுக்கும். மேலும், எனது கணக்கை அதிகாரபூர்வமாக்குவதற்கும் கொஞ்சம் காலம் எடுக்கும். ஆகையால் இந்தக் கணக்கை மட்டும் பின்தொடருங்கள்".
இவ்வாறு நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago