பாலாவின் நகைச்சுவை உணர்வு அலாதியானது என்று இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி தங்களுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளனர்.
விளம்பரப் படவுலகில் முக்கியமான இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி. சரவணா ஸ்டோர்ஸ் தொடங்கி பல்வேறு முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்கள் அனைத்துமே இவர்களுடைய இயக்கம். வெள்ளித்திரையிலும் 'உல்லாசம்' மற்றும் 'விசில்' ஆகிய படங்களை இயக்கியுள்ளனர்.
தற்போது சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் அருள் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்கி வந்தார்கள். ஆனால், கரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பு எதுவுமே இல்லை என்பதால், தங்களுடன் பழகிய நண்பர்கள், பணிபுரிந்த படங்கள் குறித்த நினைவலைகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
இதில் இயக்குநர் பாலா எப்படிப்பட்டவர், அவருடனான நட்பு குறித்து இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி கூறியிருப்பதாவது:
» 'அய்யப்பனும் கோஷியும்' ரசித்தேன்: விஷ்ணு விஷால் | 'ராட்சசன்' பிடித்திருந்தது: பிரித்விராஜ்
» கரோனா பாதித்த பெண்ணுக்கு வெற்றிகரமாகப் பிரசவம்: தமிழக அரசுக்கு லாரன்ஸ் நன்றி
"முதல் அமெரிக்கப் பயணம். நான், ஜெர்ரி, பாலா மூவரும் சான் பிரான்சிஸ்கோ சென்றோம். 'நந்தா' ரிலீஸுக்குப் பிறகு என்று நினைக்கிறேன். ஜோ என்ற நண்பர் ஒருவரின் அழைப்பை ஏற்று ஒரு படத்தின் பேச்சு வார்த்தைக்காக. கோல்டன் கேட், கூர்க்கூடு ஸ்ட்ரீட்களும் இன்ன பிறவும் பரவசங்கள், பயணங்கள் எப்போதுமே உற்சாகமானது. அதுவும் பாலா போன்ற தற்பெருமையற்ற நண்பரோடு.
பாலாவுக்கும் எங்களுக்குமான நட்பு அதீதமானது. நாள் முழுக்கப் பேசினாலும் தீராது ஏதோ பேச இருக்கும், பாலாவின் நகைச்சுவை உணர்வு அலாதியானது. நாள் முழுக்கச் சிரித்துக் கொண்டே இருக்கலாம். அதுவும் அவரது சுய பகடி செம. எந்த அளவிற்கு ஆழமானவரோ அதே அளவிற்கு நெருங்கிய நட்பு வட்டத்தில் இலகுவானவர்.
மனிதர்களை உற்றுநோக்குவதில் ஆர்வம். அவர்களது உடல் மொழியை உள்வாங்கி அதைத் திரையில் கொண்டு வருவதில் சமர்த்தன். அதனால்தான் என்னவோ பின்நாளில் ஜெர்ரியை 'பரதேசி'யில் நடிக்க வைத்தார். அதோடு அவரது இரக்க சுபாவம். கஷ்டப்படுபவர்களைக் கண்டால் தானா கண்கலங்கும். அதுவும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களைக் கண்டால் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று பதறுவார்.
நாங்கள் பே ஏரியாவுக்கு அருகே சின்ன ஊரில் தங்கினோம். அமெரிக்க வாழ்க்கையின் பல்வேறு கூறுகளைத் தெரிந்துகொள்ள முடிந்தது. சிலிகான் வேலி முழுவதும் நிறைய தமிழ் முகங்கள். இன்னொரு மதுரை நண்பர் அலெக்ஸ் உடன் நீண்ட கார் பிராயணம். இரவு பகல் தெரியாத பேச்சு, சிரிப்புப் பயணம். பயணங்கள் எப்போதுமே நமது மனசை உற்சாகப்படுத்துகிறது. விலாசமாக்குகிறது, புதிய சிந்தனைகளைத் தடுக்கிறது. எத்தனையோ கதைகள் பேசப்பட்டுக் கடைசிவரை திரைக்கு வராமல் காற்றிலேயே மிதந்து கொண்டிருக்கிறது".
இவ்வாறு இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago