மறைந்த நடிகர் இர்ஃபான் கான் பற்றி அவரது மனைவி சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்
பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது சில வருடங்களுக்கு முன்பு தெரியவந்தது. அதற்கான சிகிச்சை அவருக்குத் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இர்ஃபான் கான் உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் அவர் மும்பையின் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பெருங்குடலில் பிரச்சினை இருப்பதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். புதன்கிழமை காலை இர்ஃபான் கான் சிகிச்சை பலனின்றி காலமானார். தேசிய, சர்வதேச பிரபலங்கள் பலரும் இர்ஃபானின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர்.
தற்போது தனது கணவர் இர்ஃபான் பற்றி மனைவி சுதபா சிதார் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். தான் தன் கணவரை அணைத்திருப்பது போன்ற புகைப்படத்தை பதிவேற்றியுள்ள சுதபா, "நான் எதையும் இழக்கவில்லை, எல்லா வகையிலும் நான் பெற்றிருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
» உலகில் அதிகம் பார்க்கப்பட்ட மறுஒளிபரப்பு நிகழ்ச்சியானது ராமாயண் தொடர்: லாக்டவுனில் புதிய சாதனை
» என் வார்த்தைகள் குழறுகின்றன: இர்ஃபான் கான் மகன் பாபில் நெகிழ்ச்சி
டெல்லியின் தேசிய நாடகப் பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே சுதபாவும், இர்ஃபானும் காதலித்து வந்தனர். 1995-ஆம் ஆண்டு இருவரும் மணந்து கொண்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago