ரிஷி கபூரின் உடல் தகனம் செய்யப்பட்டது. இதில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து சில பிரபலங்கள் பங்கேற்றனர்.
67 வயதான பாலிவுட்டின் மூத்த நடிகர் ரிஷி கபூர் இன்று (ஏப்ரல் 30) காலை காலமானார். கடந்த சில வருடங்களாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ரிஷி கபூர், அதற்கான தொடர் சிகிச்சையில் இருந்தார். நேற்று (ஏப்ரல் 29) இரவு, உடல்நலக் குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவர் மறைந்த செய்தியை அவரது குடும்பத்தினர் உறுதி செய்தனர்.
மேலும் அவர்கள் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ''அரசின் ஊரடங்கு உத்தரவை மதித்து நடக்க வேண்டும் என அனைவரிடமும் கோரிக்கை வைத்திருந்தனர். எனவே, ரிஷி கபூரின் உடல் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படாமல் நேரடியாக மின்சார மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
மரைன் லைன்ஸ் சந்தன்வாடி பகுதியில் இருக்கும் மயானத்தில் அவர் உடல் தகனம் செய்யப்பட்டது. மாலை 4 மணி அளவில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இதில் ரிஷி கபூர் குடும்பத்தினருடன் ஆலியா பட், கரீனா கபூர், சைஃப் அலி கான், ஆதார் ஜெயின், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டனர். இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட அனைவருமே முகக் கவசம், கையுறை அணிந்திருந்தனர்'' என்று தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago