டிஜிட்டலில் வெளியானது ஆர்.கே.நகர்: தமிழில் முதல் படம்

By செய்திப்பிரிவு

திரையரங்கில் வெளியாகாமல் டிஜிட்டலில் வெளியான முதல் தமிழ்ப் படம் என்ற பெயரைப் பெற்றது 'ஆர்.கே.நகர்'.

வெங்கட் பிரபு தயாரிப்பில் வைபவ், சம்பத், சனா, அஞ்சனா கீர்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'ஆர்.கே.நகர்'. 'வடகறி' படத்தின் இயக்குநர் சரவண ராஜன் இயக்கியிருந்தார். நீண்ட நாட்களாக இந்தப் படம் தயாரிப்பிலிருந்து வந்தது.

பைனாஸ் சிக்கலால் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி பல முறை அறிவிக்கப்பட்டும் ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக கடந்த ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது. ஆனால், திரையரங்கு உரிமையாளர்கள் சர்ச்சை உருவானதால், இணையத்திலிருந்து நீக்கப்பட்டது.

தற்போது 'பொன்மகள் வந்தாள்' டிஜிட்டல் வெளியீடு பிரச்சினை நடந்து கொண்டிருப்பதால், இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று 'ஆர்.கே.நகர்' படத்தை டிஜிட்டலில் வெளியிட்டு விட்டனர். இதனால் இன்று (ஏப்ரல் 29) முதல் நெட்ஃபிளிக்ஸ் இணையத்தில் 'ஆர்.கே.நகர்' படத்தை அதிகாரபூர்வமாக கண்டுகளிக்கலாம்.

இதனை இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருமே தங்களுடைய ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், தமிழ்த் திரையுலகில் திரையரங்கில் வெளியாகாமல் டிஜிட்டலில் வெளியான முதல் படம் 'ஆர்.கே.நகர்' என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

46 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்